ஷா ஆலம், செப்டம்பர் 26 - சிலாங்கூர் அக்ரோஃபெஸ்ட் 2025 இந்த ஆண்டு 4,000 ஆர்க்கிட் தாவரங்கள் பார்வையாளர் களுக்காக காட்சிப் படுத்துவதன் மூலம் ஒரு புதிய ஈர்ப்பைக் கொண்டுவருகிறது.
டத்தாரான் கர்னிவல் ஸ்டேடியம் ஷா ஆலமில் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் நான்கு நாள் நிகழ்வில், தாவர அரங்கில் 10 ஆர்க்கிட் வகைகளுடன் வன கருப்பொருள் ஆர்க்கிட் காட்சிப்படுத்தல் உள்ளது.
சிலாங்கூர் வேளாண்மைத் துறையின் துணை இயக்குனர் (மேம்பாடு) வான் முகமது சுல்கர்னைன் பஹாருதீன் கூறுகையில், சிலாங்கூரில் வளர்க்கப்படும் தாவரங்களைக் கொண்ட ஆர்க்கிட் கண்காட்சி ஒரு சிறப்பம்சமாகும்."இந்த ஆர்க்கிடுகள் அனைத்தும் புக்கிட் சாங்காங்கில் உள்ள நிரந்தர உணவு உற்பத்தி பூங்காவில் உள்ள தொழில் முனைவோர் இடமிருந்து பெறப்படுகின்றன.