ad

வெ.228,000 மதிப்புள்ள உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியை கடத்தும் முயற்சி முறியடிப்பு

26 செப்டெம்பர் 2025, 9:09 AM
வெ.228,000  மதிப்புள்ள உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியை கடத்தும் முயற்சி முறியடிப்பு

அலோர் ஸ்டார், செப். 26-  புக்கிட் காயு ஹீத்தாம் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு  வளாகத்தில் நேற்று ஒரு கொள்கலன் லோரியை சோதனை செய்த  எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவன (ஏ.கே.பி.எஸ்.)  அதிகாரிகள் 228,510 வெள்ளி மதிப்புள்ள
2,084 பெட்டிகள் உறைந்த கோழி இறைச்சியைக் கைப்பற்றினர்.

தாய்லாந்திலிருந்து புக்கிட் காயு ஹீத்தாம் எல்லை நுழைவு வழியாக அதிகாலை 11.40 மணியளவில் உறைந்த கோழியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட  முயற்சியை தாங்கள்  வெற்றிகரமாக முறியடித்ததாக ஏ.கே.பி.எஸ்.  தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட  கொள்கலன் லோரி இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டது. ஹலால் சான்றிதழில் உள்ள எண் தயாரிப்பு பேக்கேஜிங்கில் உள்ள தகவலுடன் பொருந்தவில்லை என்பது சோதனையில்  கண்டறியப்பட்டது.
இது சந்தேகங்களை எழுப்பியதோடு   இது ஒரு வகையான மோசடி அல்லது தவறான தகவல்களை வழங்கும் நோக்கிலானதாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது என்று ஏ.கே.பி.எஸ். ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு 2011ஆம் ஆண்டு
மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டத்தின் (சட்டம் 728) 13வது பிரிவின் கீழ் மேல் நடவடிக்கைக்காக கெடா மாநில  தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.