புத்ராஜெயா, 26 செப்: RON95 பெட்ரோல் மானியத் (BUDI95) திட்டத்தின் நன்மையை மீனவர்கள், தோட்டக்காரர்கள், சிறிய படகு உரிமையாளர்கள் ஆகியோரும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த அரசு அவர்களின் மேல் முறையீடுகளை ஆராய்ந்து பரிசீலிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சபா, சரவாக் மற்றும் கிளந்தான் போன்ற இடங்களில், சிறிய மீனவர்கள் அல்லது படகு உரிமையாளர்கள், தங்களது பெயரில் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும் RON95 பெட்ரோல் பயன்படுத்தும் நிலை இருப்பதை அரசு உணர்கிறது.“மீனவர்களுக்கும் தோட்டக்காரர்களுக்கும் தனி சலுகைகள், டீசல் உதவிகள் உள்ளன. ஆனால் உண்மையாகவே RON95 பயன்படுத்துபவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அரசு தகுதியானவர்களுக்கு நிச்சயமாக உதவும் என்றார்.
மேலும் ஜெனரேட்டர் செட், புல் வெட்டும் இயந்திரம் போன்றவை RON95 பயன்படுத்தும் பட்சத்தில் அரசு உதவியை வழங்க பரிசீலிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும் BUDI95 திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே, இதன் நடைமுறையைத் தவறாக சித்தரிக்க முயலும் சிலரின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.