கிள்ளான், 26 செப்டம்பர்: சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா எல்பினி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், அஃப்சா ஃபாடினி டத்தோ அப்துல் அஜீஸை எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ள நிழையில் கிள்ளான் மாநகராட்சி தரப்பில், இஸ்தானா ஆலம் ஷா சுற்றுப்புறங்களில் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை கொண்டாடும் வகையில், அடிப்படை வசதிகள் மற்றும் பூங்கா அலங்காரங்கள் உட்பட பராமரிப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக செய்யப்படுகின்றன, என்று துணை மேயர் முகமட் ஜாரி அஃபெண்டி முகமட் ஆரிஃப் கூறினார்.
திருமண விழா கிள்ளானில் உள்ள மஸ்ஜிட் இஸ்தானா டிராஜா, இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறும். இதற்கிடையில், அரச திருமண விழாவை கௌரவிக்கும் அரச நிச்சயதார்த்த விழா மற்றும் அரச விருந்து அக்டோபர் 22ஆம் தேதி பாலாய்ருங் செரி மற்றும் பாலாய் சாந்தபன் டிராஜா, இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறும், என்று அவர் கூறினார்.