கோத்தா பாரு, செப். 26- ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு, கம்போங் பத்து பாலாயில் இன்று அதிகாலை ஓட்டுநர் உட்பட 15 பேருடன் பயணித்த விரைவுப் பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகாலை 5.30 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
உடனடியாக புறப்பட்ட சுங்கை டுரியான் மற்றும் கோல கிராய் தீயணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அதிகாலை 5.54 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது.
சம்பவ இடத்தில், நாசா எக்ஸ்பிரஸ் விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அதில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 15 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர் என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
15 பேருடன் பயணித்த விரைவு பேருந்து கவிழ்ந்தது- இருவர் இடிபாடுகளில் சிக்கினர்
26 செப்டெம்பர் 2025, 1:47 AM