ஷா ஆலம், செப் 25: சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா எல்பினி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், அஃப்சா ஃபாடினி டத்தோ அப்துல் அஜீஸை எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருமண விழா கிள்ளானில் உள்ள மஸ்ஜிட் இஸ்தானா டிராஜா, இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறும் என்று சிலாங்கூர் சுல்தானின் தனிச் செயலாளர், டத்தோ முகமட் முனிர் பானியின் ஓர் அறிக்கையில் மூலம் தெரிவித்தார்.
“சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும், தனது மகன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
“இதற்கிடையில், அரச திருமண விழாவை கௌரவிக்கும் அரச நிச்சயதார்த்த விழா மற்றும் அரச விருந்து அக்டோபர் 22ஆம் தேதி பாலாய்ருங் செரி மற்றும் பாலாய் சாந்தபன் டிராஜா, இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.