பேங்காக், செப் 25 - புதன்கிழமை காலை தாய்லாந்து, பேங்காக்கில் உள்ள முதன்மை மருத்துவமனைக்கு வெளியே நிலம் உள்வாங்கும் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால், அப்பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு சாலைகள் மூடப்பட்டன.
அந்நாட்டு நேரப்படி காலை 7.15 மணியளவில் டுசிட் மாவட்டத்தில் உள்ள வஜிரா மருத்துவமனைக்கு அருகில் இந்த சம்பவம் ஏற்பட்டது.
புதிய எம்.ஆர்.தி நிலையத்திற்கான கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில், சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவு காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டதாக பேங்கோக் ஆளுநர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பெர்னாமா