ad

இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதற்கான ஐந்து திட்டங்கள் - ரமணன்

25 செப்டெம்பர் 2025, 3:22 AM
இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதற்கான ஐந்து திட்டங்கள் - ரமணன்

புத்ராஜெயா, செப் 25 - இந்திய சமூகம், குறிப்பாக பி40 பிரிவினரை வலுப்படுத்துவதற்கான ஐந்து திட்டங்கள் குறித்து, இந்திய உருமாற்று பிரிவு, மித்ரா கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அவை உடனடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படும்.

அத்திட்டங்களில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு, கேபிகேடி-இன் கீழ் நிர்வகிக்கப்படும். 21 இந்திய பாரம்பரிய கிராமங்களில் மேற்கொள்ளப்படும் 33 திட்டங்களும் அதில் அடங்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கேபிகேடி, பிரதமர் துறை அமைச்சின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு, பொருளாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உட்பட சில அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு தலைமை ஏற்றப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரமணன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேவேளையில், நாடு முழுவதிலும் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து விவேகப் பலகையைப் பொருத்துவது இரண்டாவது திட்டமாகும்.

அதோடு, நாடு முழுவதிலும் உள்ள 1,000 வழிபாட்டு தலங்களுக்கு, பிரதமரின் எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைப் பொருத்து, ஒரு முறை வழங்கப்படும் உதவித் தொகையான 20,000 ரிங்கிட்டிற்கு விண்ணப்பிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

"1,000 ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் வழங்குவோம். இதன்வழி அதிகமானோர் பயன்பெறுவர். அந்தப் பணத்தை ஆலயங்களுக்கு பொருட்கள் வாங்க, தேவாரம், பரதநாட்டியம் அல்லது தமிழ் வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தலாம்," என்றார் ரமணன்.

அதைத் தவிர்த்து, அடுத்த பள்ளித் தவணையின்போது பள்ளி உடைகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் உதவி தொகைக்கான பரிந்துரை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதோடு, கல்வி அமைச்சின் ஆய்வின் தகவல்களைப் பெற்ற பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.