குருண், செப். 24 - இம்மாதம் 11 ஆம் தேதி பெண்மணி ஒருவரையும் கைப்பேசி விற்பனையாளரையும் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அனிஸ் சுராயா அகமது முன்னிலையில் தனக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதாக அடையாளமாக சைட் அல் இக்பால் சைட் ஷாருடின் (வயது 30) என்ற அந்த ஆடவர் தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையே யான், குவார் செம்படாக், தாமான் நோனாவில் உள்ள ஒரு வீட்டின் முன் கு அஸ்ராப் கு ஷைஃப் @ கு ஷுயிப் (வயது 30) என்பவரைக் கொலை செய்ததாக சைட் அல் இக்பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே குடியிருப்பு பகுதியில் அதே தேதி மற்றும் அதே நேரத்தில் 28 வயதான நூருல் நூர் சியாமிரா காமிஸைக் கொலை செய்ததாக தனியார் துறை ஊழியரான அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அரசுத் தரப்பு வழக்குரைஞர் நிக் நூர்ஹாசிரா துவான் வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அப்துல் ஹய்யி சலீம், தியானா இப்ராஹிம் மற்றும் ஷமீர் ஹாசிக் ஷஹாருதீன் ஆகியோர் ஆஜராகினர்.
பெண்மணி, கைப்பேசி விற்பனையாளரை கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
24 செப்டெம்பர் 2025, 9:47 AM


