ஷா ஆலம், செப் 24: மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறிய நபர்கள், BUDI95 திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.
சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பதிவுகளின் அடிப்படையில், மொத்தம் 925,421 உரிமதாரர்கள் இன்னும் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவர்களில் 154,641 பேர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதை புதுபிக்காமல் உள்ளனர் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
செப்டம்பர் 22 அன்று, BUDI95 நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, MyJPJ, MySikap விண்ணப்பங்கள், கியோஸ்க்குகள் மற்றும் கவுண்டர்கள் வழியாக 26,991 CDL புதுப்பித்தல் பரிவர்த்தனைகளை சாலைப் போக்குவரத்துத் துறை பதிவு செய்துள்ளது.
வருமான அளவைப் பொருட்படுத்தாமல், செப்டம்பர் 30 முதல் RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 ஆக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் உள்ள அனைத்து குடிமக்களும் RON95 மானியத்திற்கு தகுதியுடையவர்கள்.


