கோலாலம்பூர், செப். 24 - கடந்த வாரம் பொறுப்பேற்ற அரசு துணை வழக்கறிஞர் (டிபிபி) போதைப்பொருள் வைத்திருந்ததற்காக நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) உறுதிப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட டிபிபி, அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட வேளையில் அவ்வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக எம்.ஏ.சி.சி தெரிவித்தது.
கடந்த வாரம் ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணிக்கு சேர்ந்த ஒரு டிபிபி கைது செய்யப்பட்டது எம்.ஏ.சி.சி.யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை எம்.ஏ.சி.சி. அதிகாரிகளிடம் முழுமையாக விட்டுவிடுகிறது. மேலும், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறது என்று எம்.ஏ.சி.சி. இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆணையத்தின் உயர்நெறி மற்றும் நிர்வாகம் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய ஊழியர்களின் தவறுகள், சட்ட மீறல்கள் அல்லது குற்றச் செயல்களில் சமரசம் செய்யப்படாது என்பதையும் அது வலியுறுத்தியது.
புதிதாக நியமிக்கப்பட்ட எம்.ஏ.சி.சி.யின் துணை அரசு வழக்கறிஞர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார்
24 செப்டெம்பர் 2025, 6:25 AM


