“Price Catcher” செயலி: பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத பயனுள்ள ஆப்ஸ்

24 செப்டெம்பர் 2025, 4:39 AM
“Price Catcher” செயலி: பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத பயனுள்ள ஆப்ஸ்

கோலாலம்பூர், செப் 23 – மலேசிய உள்துறை, செலவு மற்றும் வாழ்வு செலவுத்துறை அமைச்சகம் (KPDN) 2019-இல் அறிமுகப்படுத்திய “Price Catcher” செயலி இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளதாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்திருந்தனர்.

24 வயதான பூனா ஸ்ரீ, “இந்த செயலி பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இதன் வடிவமைப்பு குடும்பங்களின் செலவுகளை திட்டமிட மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார்.

அதேபோல், இந்த செயலி பற்றி அறியவில்லை, ஆனால், நாளந்தோறும் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என 22 வயதான நுருல் அயின் ஆல்யா கருதினார். 480 இடங்களில் பொருட்களை மலிவாக வாங்கிக்கொள்ளலாம். இளைஞர்களுக்கும் தங்களின் வருமானத்துக்கு ஏற்ப செலவுகளை திட்டமிட உதவியாக இருக்கும் என்றார்.

மேலும் 24 வயதான லோ ஜியா, “இந்த செயலி நன்றாக இருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு இது பற்றி அதிகளவில் தெரிய அமைச்சகம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த செயலி வெட் மார்க்கெட், ஹைப்பர்மார்க்கெட், சூப்பர்மார்க்கெட், மினி மார்க்கெட் போன்ற இடங்களின் விலைத் தகவல்களை வழங்குவது சிறப்பாக உள்ளது,” என்றார்.

இந்த செயலியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்னும் பயன்படுத்தவில்லை. இதன் உள்ளடக்கம் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன என பலர் கூறியுள்ளனர் என்றார் ஷாலினி சேகர் (26). எதிர்காலத்தில் இந்த செயலியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றார். செயலி ஆறு பிரிவுகளில் 480 பொருட்களின் விலை விவரங்களை காட்டுகிறது.

25 வயது முகமட் அஃபிக், “இந்த செயலியை பற்றி எனக்கு தெரியவில்லை. இந்த பயனுள்ள செயலி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும்,``என்றார்.

“Price Catcher” செயலி தற்போது 480 அத்தியாவசிய பொருட்களின் விலைத் தகவல்களை வழங்கி, பொதுமக்கள் எளிதில் ஒப்பீடு செய்து மலிவான விலையில் பொருட்களை வாங்க உதவுகிறது. ஆனால், பலருக்கும் இன்னும் இந்த செயலி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. வருத்தக்குரியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.