ஷா ஆலம், செப் 23: இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (KBS), மிரி தேசிய இளைஞர் திறன் நிறுவனம் (IKBN) உட்பட தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதை வழக்குகளில் சமரசம் செய்யாது என்று வலியுறுத்தியுள்ளது.
இதில் செப்டம்பர் 19 அன்று மாலை 4.30 மணியளவில் மாணவர் குழு ஒன்று சக நண்பரிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது தொடர்பான வீடியோ பதிவைத் தொடர்ந்து இந்த கூற்று வெளியிடப்பட்டது.
படிவதை மிகவும் தீவிரமானது என்று வலியுறுத்தப்பட்டது, ஏனெனில் அது அனைத்து இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் பயிற்சி நிறுவனங்களின் (ILKBS) அடிப்படையான பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தின் அம்சங்களை பாதிக்கிறது என ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
"இச்சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 22 அன்று புகார் பெற்ற பிறகு, மிரி IKBN உடனடியாக தொடர் நடவடிக்கைகளை எடுத்து, விசாரணைகளை நடத்த மலேசியா காவல்துறையுடன் (PDRM) ஒத்துழைத்தது.
"விதிமுறைகள் மீறும் செயலைச் செய்பவர்கள் மீது இடைநீக்கம் அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிக்கை விளக்கியது.
பகடிவதை பிரச்சனைகளில் அமைச்சகம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய நிலையான இயக்க நடைமுறைகள் (SOPகள்) செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய காவல்துறையினரை ஈடுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
"மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் எப்போதும் அமைச்சகத்தின் முன்னுரிமையாகும் என்று KBS உத்தரவாதம் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.