ad

வெள்ளம் - சரவாக்கில் நிலைமை சீரடைகிறது, சபா முழுமையாக மீண்டது

23 செப்டெம்பர் 2025, 9:40 AM
வெள்ளம் - சரவாக்கில் நிலைமை சீரடைகிறது, சபா முழுமையாக மீண்டது

கோலாலம்பூர், செப்.  23 - சரவாக் மாதிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து  வருகிறது. இன்று காலை 7.00  மணி நிலவரப்படி மிரியில் உள்ள  டேவான் சுவாரா மருடியில் செயல்படும்  தற்காலிக  வெள்ள நிவாரண மையத்தில்  ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.

வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து   நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் நேற்று மாலை தங்கள் வீடுகளுக்குத் திரும்பியதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.

இதற்கிடையில், சபாவில் நேற்று மாலை வெள்ளம் முழுமையாக வடிந்ததால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பெனாம்பாங்,  டேவான் கம்போங் காவிரில் உள்ள நிவாரண மையத்தில்   இன்னும் தஞ்சம் புகுந்துள்ளதாக சபா பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

இதற்கிடையில், இன்று காலை முதல் இன்றிரவு வரை சபாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.