ad

ஐசி தொழில்துறைக்கான முன்னணி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள மாநில அரசு முயற்சி

23 செப்டெம்பர் 2025, 9:25 AM
ஐசி தொழில்துறைக்கான முன்னணி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள மாநில அரசு முயற்சி
ஐசி தொழில்துறைக்கான முன்னணி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள மாநில அரசு முயற்சி

ஷா ஆலம், செப் 23 — பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பு (IC) தொழில்துறைக்கான முன்னணி மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான மூலோபாய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இன்று ஷாங்காயில் சீன முதலீட்டு நிறுவனமான China Fortune-Tech Capital (CFTC) உடனான சந்திப்பை நடத்திய பின்னர், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“ஷாங்காயை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, CN¥3 பில்லியனுக்கும் அதிகமான (RM1.77 பில்லியன்) பொருளாதாரவளத்தை கொண்ட ஐசி துறையில் கவனம் செலுத்தும் முதலீட்டு நிறுவனமான China Fortune-Tech Capital (CFTC) சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

குறைக்கடத்தித் துறையை விரிவுபடுத்துவதற்கும், உள்ளூர் திறமையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு மையமாக சிலாங்கூர் ஐசி வடிவமைப்பு பூங்காவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இந்த சந்திப்பு முக்கியமாக இருந்தது.

“இத்தகைய திட்டங்கள், குறைக்கடத்தி தொழில் துறையை வலுப்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை நிறைவு செய்வது மட்டுமல்லாமல், ஐசி வடிவமைப்பில் கால்பதிக்கும் நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளையும் துரிதப்படுத்துகின்றன” என்று அமிருடின் கூறினார்.

சிலாங்கூர் தனது முதல் ஐசி வடிவமைப்பு பூங்காவை கடந்த ஆண்டு பூச்சோங்கில் தொடங்கியது. மேலும், எதிர்வரும் நவம்பரில் சைபர்ஜெயாவில் இரண்டாவது பூங்காவைத் தொடங்க உள்ளது.

முதலீட்டிற்கு அப்பால், மேம்பட்ட குறைக்கடத்தி அகாடமி (ASEM) நிறுவுதல் மற்றும் முக்கிய பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மனித மூலதன மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் சந்திப்பு வலியுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.