சுபாங் ஜெயா, செப். 23 - சுபாங் ஜெயா தொகுதி ஏற்பாட்டில் மலேசிய தின சிறப்பு நிகழ்வு 20ஆம் தேதி இங்குள்ள சுபாங் பெரேட் பேரங்காடியில் கோலாகலமாக நடைபெற்றது.
தொகுதி மக்கள் சேவை மையம், சுபாங் நாடாளுமன்றத் தொகுதி, கே.கே.ஐ. ஆகிய தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ தலைமை தாங்கினார்.
சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு அங்கமாக சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 70 சிறார்கள் பங்கு கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பல்லின மக்களை ஒன்றுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட மலேசிய தின உணர்வை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் இங் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிறப்புமிக்க இந்த தினத்தை மக்கள் பயனுள்ள வழியில் செலவிடுவதற்கும் ஒன்றுசேர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்நிகழ்வு வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் சுபாங் ஜெயா தொகுதி இந்திய சமூகத் தலைவர் நவமலர் நாகப்பன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சுபாங் ஜெயா தொகுதி ஏற்பாட்டில் மலேசிய தின நிகழ்வு
23 செப்டெம்பர் 2025, 9:09 AM