ஜோர்ஜ்டவுன், செப் 23 — RON95 பெட்ரோல் மானியம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
மின்னணு ஹெயிலிங் ஓட்டுநர்கள் போன்ற மாதத்திற்கு 300 லிட்டருக்கு மேல் தேவைப்படும் குழுக்கள், அந்தந்த நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலை பெற வேண்டும். உண்மையை சரிபார்ப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தகுதி உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நிறுவனத்தின் ஆதரவுடன் விண்ணப்பிக்கலாம். எரிபொருள் உண்மையிலேயே வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, மின்-ஹெய்லிங் அமைப்பின் பதிவுகள் மூலம் அதன் பயன்பாட்டை நாங்கள் சரிபார்க்கலாம்.
“அரசாங்கம் அதிகப்படியான தினசரி பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும்,” என்று அவர் தேசிய அளவிலான மெகா மின்-விலைப்பட்டியல் சுற்றுப்பயணத் தொடர் 2/2025 தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும் இலக்கு வைக்கப்பட்ட RON95 பெட்ரோல் மானியம் பெற தகுதியுடையவர்கள் என்று அமீர் மேலும் கூறினார். இது மாதத்திற்கு 300 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.
மானிய செயல்பட்டிகான ஏற்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் நிலையங்களில் இயந்திரங்களை நிறுவுவது உட்பட தங்கள் தயார்நிலையை உறுதிப்படுத்தியுள்ளன.
"புதிய முயற்சிகள் சிறிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். பொதுமக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அரசாங்கம் நிச்சயம் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்," என்றார் அவர்.