ஷா ஆலம், செப் 22: செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் மட்டுமே (BUDI95) திட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத உள்ளூர் நபர்கள் லிட்டருக்கு RM1.99 என நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல் மானியத்தை அனுபவிக்க முடியாது என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
RON95 பெட்ரோலின் விலை அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் லிட்டருக்கு RM2.05 இலிருந்து RM1.99 ஆகக் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்அறிவித்தார்.
இத்திட்டம் 16 மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள நுகர்வோருக்கு படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் இந்த உதவியை பெற தகுதியற்றவர்கள், மானியம் இல்லாத அளவில் நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படும் விலையில், லிட்டருக்கு சுமார் RM2.60 என மதிப்பிடப்பட்ட விலையில் RON95யை பெறுவார்கள்.