ஜியாக்சிங், செப். 22 - உயர் தொழில்நுட்ப மின் தொகுதி உற்பத்தி நடவடிக்கைகளைத் திறப்பதற்கான 20 கோடி வெள்ளி முதலீட்டுத் திட்டத்திற்கு சிலாங்கூர் உட்பட மலேசியாவில் உள்ள புதிய இடங்களை ஸ்டார்பவர் செமிகண்டக்டர் லிமிடெட் நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது.
ஜெஜியாங்கின் ஜியாக்சிங்கில் அமைந்துள்ள இந்த நிறுவனம் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தொடங்கி சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வப் பணி நிமித்தப் பயணத்தின் போது இந்த நோக்கத்தை அறிவித்தது.
ஸ்டார்பவர் நிறுவனம் மாதிரி தொகுப்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னோடியாக உள்ளது.
முதல் கட்டமாக 20 கோடி வெள்ளி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்களில் முக்கியமான கூறுகளான IGBT மற்றும் SiC MOSFET தொகுதிகளின் உற்பத்தியில் அது கவனம் செலுத்தும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் உள்பட
நாட்டின் முக்கிய துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையிலான அதன் இருப்பிடம் உட்பட வசதிகள் ஸ்டார்பவர் நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து வியூக நன்மைகளையும் சிலாங்கூர் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இது தவிர, மாநில அரசு இந்த அக்டோபரில் ஸ்பீட் சிலாங்கூர் எனப்படும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். இது முதலீட்டு ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விவகாரங்களை எளிதாக்கும்.
அதே நேரத்தில் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (சைடேக்) நிர்வாகத்தின் கீழ் மேம்பட்ட மலேசியா செமிகண்டக்டர் அகாடமி முன்னெடுப்பின் மூலம் திறன் மேம்பாடு சிலாங்கூருக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது.