கோலாலம்பூர், செப் 22 - நாடு தற்போது கோவிட்-19 இன் புதிய உருமாற்றத் தொற்றான XFG பரவுவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
Omicron-னின் துணை உருமாற்றுத் தொற்றான XFG, அதன் வீரியத்தின் அளவு அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதுவரை, ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
துணை உருமாற்றுத் தொற்றான XFG, 9.1 விழுக்காடு பதிவாகியிருக்கும் நிலையில், GM1 மற்றும் XEC தலா 17.4 விழுக்காடு மற்றும் 12.7 விழுக்காடு பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சுல்கிஃப்ளி இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
சுகாதார அமைச்சும் தேசிய அவசரக் காலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மையம் (CPRC) எப்போதும் தயாராக இருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையை தமது தரப்பு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெர்னாமா