ஷா ஆலம், செப் 22: டத்தோ மந்திரி புசார், டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி சீனாவிற்கு ஒன்பது நாள் அதிகாரப்பூர்வ பணிப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று நள்ளிரவில் ஷாங்காயை பாதுகாப்பாக அடைந்தார்.
சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் மொபிலிட்டி எக்ஸ்கோ, இங் சஸீ ஹான்; எம்பிஐ தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சாய்போலியாசன் எம் யூசோப், எம்பிஐ அறக்கட்டளைத் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர், இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசன் அஷாரி ஹாஜி இட்ரிஸ் மற்றும் SIDEC தலைமை நிர்வாக அதிகாரி யோங் கை பிங் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
சீனாவில் தங்கியிருக்கும் போது, ஷாங்காய், அன்ஹுய், பெய்ஜிங், ஷென்சென் மற்றும் குவாங்டாங்கில் உள்ள மூலோபாய மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் பல்வேறு சந்திப்புகள், தள வருகைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திடும் நட்வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
பயணத்தின் முதல் நாளில், அமிருடின், பவர் மாட்யூல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஸ்டார்பவர் செமிகண்டக்டர் லிமிடெட் மற்றும் மேம்பட்ட மின்சார பவர்டிரெய்ன் (eDrive) அமைப்புகளின் சப்ளையரான ஷாங்காய் எலக்ட்ரிக் டிரைவ் கோ. லிமிடெட் ஆகியவை உடன் சந்திப்பு நடத்த உள்ளார்.
மந்திரி புசாரும் உடன் சென்றவர்களும் செப்டம்பர் 30 அன்று மலேசியா திரும்புவார்கள்.