கோலாலம்பூர், செப் 22 - எதிர்வரும் செப்டம்பர் 30 முதல், பெட்ரோல் நிலைய கவுண்டர் மற்றும் பம்பில் அல்லது அதன் செயலி வழியாக MyKad அட்டையை பயன்படுத்துவதன் மூலம், அனைத்து மலேசியர்களும் லிட்டருக்கு RM1.99 என்ற புதிய விலையில் RON95 பெறலாம்.
செப்டம்பர் 27 முதல் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களும், செப்டம்பர் 28 முதல் STR பெறுநர்களும் இந்த நன்மையை முன்னதாகவே அனுபவிப்பார்கள்.
உலகம் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார சூழலை எதிர்கொண்டாலும், மலேசியா RON95 விலையை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் மடாணி அரசாங்கத்துடன் தொடர்ந்து கடினமாக உழைக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இந்த நடவடிக்கை மிக உயர்ந்த பாராட்டின் அடையாளமாகும்.