ad

அனைத்துலக சுற்றுலா விழாவில் இஸ்ரேல் பங்கேற்க இத்தாலி தடை

22 செப்டெம்பர் 2025, 2:23 AM
அனைத்துலக சுற்றுலா விழாவில் இஸ்ரேல் பங்கேற்க இத்தாலி தடை

ரோம், செப். 22 - எதிர்வரும் அக்டோபர் 8 முதல் 10 வரை ரிமினி நகரில் நடைபெறவிருக்கும் அனைத்துலக  சுற்றுலா நிகழ்வான டிடிஜி டிராவல் எக்ஸ்பீரியன்ஸ்  2025 நிகழ்வில் இஸ்ரேல் பங்கேற்பதைத் தவிர்க்க இத்தாலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது.

காஸா  தீபகற்பத்தில் இஸ்ரேல் நடத்தி வரும்  தொடர்ச்சியான தாக்குதல்கள் இனப்படுகொலை தாக்குதல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  அந்நகரின் நகராட்சி மன்றத்திற்கு அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் பரவலான பொதுமக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

காசாவில் நடந்த போர் காரணமாக இத்தாலி முழுவதும் அதிகரித்து வரும் பதற்றங்களின் விளைவாக  பெருகி வரும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் மற்றும் பெரிய அளவிலான போராட்டம் வெடிக்கும்  அபாயத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரிமினி மேயர் ஜமீல் சடேகோல்வாட் தெரிவித்தார்.

இஸ்ரேலின் பங்கேற்பை நியாயப்படுத்துவது நிகழ்வை ஒரு முக்கிய ஆர்ப்பாட்டக் களமாக
மாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களான இத்தாலிய கண்காட்சி குழு  இஸ்ரேலின் பங்கேற்புக்கான நிபந்தனைகள் இனி செல்லுபடியாகாது என்பதை உறுதிப்படுத்தியது.

காசாவில் நிகழ்ந்து வரும் அழிவு மற்றும் உயிர் இழப்புகளைக் கருத்தில் கொள்கையில்  இஸ்ரேலின் இவ்விழாவுக்கான  வருகை  "தார்மீக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பொருத்தமற்றது" என்று குழு கூறியது.

போர், அழிவு மற்றும் மரணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியை சுற்றுலா தலமாக விளம்பரப்படுத்துவது நெறிமுறையற்றது மற்றும் தொழில்முறைக்கு முரணானது என்று இத்தாலிய அரசாங்கத்தின் ஊடக செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை நிறுவனம் மேற்கோள் காட்டியது.

விசென்சாவிலிருந்து கண்காட்சி குழுவில் இணைந்த பிறகு ரிமினி இஸ்ரேலிய சுற்றுலா நிறுவனத்திடம்  அவர்களின் பங்கேற்பு விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டத் தகவல்  அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாகவும் அது கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.