ad

சிலாங்கூரில் படைப்புத் துறைக்கான RM80,000 தொடக்க நிதி அறிவிப்பு

21 செப்டெம்பர் 2025, 9:51 AM
சிலாங்கூரில் படைப்புத் துறைக்கான RM80,000 தொடக்க நிதி அறிவிப்பு
சிலாங்கூரில் படைப்புத் துறைக்கான RM80,000 தொடக்க நிதி அறிவிப்பு

சுபாங் ஜெயா, 21 செப்டம்பர் – சிலாங்கூர் மாநில அரசு டனா மைக்ரோ கிரியேட்டிவ் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் RM80,000 நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, படைப்புத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் தொடக்க நடவடிக்கையாக வழங்கப்படவுள்ளது என மாநில தொழில் முனைவோர் நிர்வாக சபை உறுப்பினர் மொஹ்த் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.

மொத்தம் 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன, அவை இறுதி தேர்வுக்காகத் தகுதிபடுத்தப்படும். இந்த RM80,000 இவ்வாண்டுக்கான தொடக்க நிதி மட்டுமே. தேர்வுகள் சிலாங்கூர் படைப்புத் பொருளாதார எக்ஸ்போ 2025(SCEE25) எனப்படும் நிகழ்வில் நடைபெறும். இந்த எக்ஸ்போ 23 மற்றும் 24 செப்டம்பர் தேதிகளில் ஷா ஆலாம் நகர சபை மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

தேர்வுகள் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், அனிமேஷன், படைப்புத் தீர்வுகள் மற்றும் சமூகப் படைப்புத் தொழில் ஆகிய நான்கு பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்படும். 500-க்கும் மேற்பட்ட தொழில்துறை வீரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி சிலாங்கூர் படைப்புத் பொருளாதார செயல்திட்டம் 2035-இன் ஒரு பகுதியாகும். அது நவம்பரில் நடைபெறும் சிலாங்கூர் மாநில சபை அமர்வில் வெளியிடப்படும். இந்தத் திட்டம் 2035 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு RM20 பில்லியன் பங்களிப்பு செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.