ஈப்போ, 20 செப்டம்பர்: புந்தோங் நீர்வீழ்ச்சியில் 17 வயது சிறுவன் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பேராக் மாநில மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் ஷாஸ்லீன் முகமது ஹனாபியா கூறுகையில், காலை 11.26 மணிக்கு சுகாதார அமைச்சு அவசர அழைப்பு விடுத்து, காயமடைந்தவரை கீழே இறக்க உதவி கோரியது.
இதையடுத்து, மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் நடை பயணம் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தை அடைய வேண்டி இருந்தது.அச்சிறுவன் மருத்துவ பணியாளர்களிடமிருந்து ஆரம்ப சிகிச்சை பெற்றார், ஆனால் பின்னர் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது, என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.