ஷா ஆலம், செப். 20- வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு சிலாங்கூர் நல்வாழ்வு உதவித்திட்டம் (பிங்காஸ்) அடுத்தாண்டு தரம் உயர்த்தப்படும்.
சம்பந்தப்பட்டத் தரப்பினர் வறுமைலிருந்து முழுமையாக மீள்வதற்கு உதவும் வகையில் பிங்காஸ் திட்டத்தின் செயல்முறையை தமது தரப்பு முழுமையாக ஆராயும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ பாப்பாராய்டு கூறினார்.
மக்களின் சமூக-பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதில் உதவும் நோக்கில் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரியுடன் இத்திட்ட அமலாக்கம் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த முறை உதவி தேவைப்படும் குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளோம்.
அவர்கள் வறுமையிலிருந்து விடுபட உதவும் நோக்கில்
நிபந்தனைகளைத் தளர்த்துவது அல்லது மாற்றுவதன் மூலம் பிங்காஸ் செயல்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உள்ளிட்ட தரப்பினரை மையமாகக் கொண்ட பல திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதன் வழி அவர்களின வாழ்க்கைச் சிரமங்கள் தீர்க்கப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம்
கூறினார்.
கடந்த 2022ஆம் தொடங்கப்பட்ட இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 46 திட்டங்களில் ஒன்றாக பிங்காஸ் விளங்குகிறது.
ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம் (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தய்மார்களுக்கான கிஸ் ஐ.டி . திட்டத்திற்கு மாற்றாக பிங்காஸ் அமல்படுத்தப்பட்டது.

அதிகமான மக்கள் இந்த பிங்காஸ் திட்டத்தில் பயன்பெற உதவும் வகையில் கடந்த ஆண்டு முதல் இத்திட்ட விண்ணப்பத்திற்கான குடும்ப வருமான வரம்பு 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் வேலையின்மை விகிதங்களைக் தொடர்ந்து குறைப்பதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறிய பாப்பாராய்டு, அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சந்தை உட்பட பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அடுத்தாண்டில் வேலையின்மை விகிதம் கோவிட்-19 காலத்தில் இருந்த நான்கு விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது இரண்டு விழுக்காடாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் திட்டமிடலுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது.
இருப்பினும், வேலையின்மை பிரச்சினையை நாம் சிறப்பாக கையாண்டால் அதனை 1.8 சதவீதமாகக் குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.