கோலாலம்பூர், செப். 19 - பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, ஜாலான் பெக்காகா 8/1, குகுசான் கெசும்பார் அடுக்குமாடி குடியிருப்பின் 'சி' புளோக்கில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 உணவகங்கள் சேதமடைந்தன.
இத்தீவிபத்து குறித்து மாலை 6.06 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து முதல் தீயணைப்பு வாகனம் மாலை 6.20 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது. மாலை 6.24 மணிக்குள் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீ விபத்தில் 50x50 சதுர அடி பரப்பளவு கொண்ட ஐந்து உணவகங்கள் எரிந்து நாசமானதாக முக்லிஸ் மேலும் கூறினார்.
இந்த தீ விபத்தில் ஒரு புரோட்டான் சாகா கார் (20 சதவீதம்), ஒரு புரோட்டான் வீரா கார் (60 சதவீதம்) மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் (தலா 50 சதவீதம்) பாதிக்கப்பட்டன. இருப்பினும் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து- ஐந்து உணவகங்கள் சேதம்
20 செப்டெம்பர் 2025, 4:21 AM