எகிப்து, செப் 19 - 2025 எகிப்து பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தோல்வி கண்டார்.
உபசரணை நாட்டின் வீராங்னை அமினா ஒர்ஃபிடம் வீழ்ந்ததை அடுத்து, இப்போட்டியின் அறையிறுதி சுற்றுக்கு செல்லும் சிவசங்கரியின் கனவு ஈடேறாமல் போனது.
எகிப்தின் கிசாவில் நடைபெறும் இந்த பி.எஸ்.ஏ தொடர் ஸ்குவாஷ் போட்டியில், உலகின் ஏழாம் இடத்தில் உள்ள சிவசங்கரி, நான்காவது நிலை வீராங்கனை, அமினா ஒர்ஃபி உடன் போட்டியிட்டார்.
அதில், 6-11, 8-11, 11-4 மற்றும் 9-11 என்ற செட் கணக்கில் போராடிய சிவசங்கரி இறுதியில் தோல்வியடைந்தார்.
2023 அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டி தொடங்கி, அவ்விருவரும் இதுவரை ஏழு போட்டிகளில் சந்தித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், அமினா ஒர்ஃபியிடம் சிவசங்கரிக்கு இது ஆறாவது தோல்வியாகும்.
பெர்னாமா