ad

வழிபாட்டுத் தளங்கள் காரணமாக வழித்தடத்தில் மாற்றம் - பொதுப்பணித் துறை விளக்கம்

19 செப்டெம்பர் 2025, 3:48 AM
வழிபாட்டுத் தளங்கள் காரணமாக வழித்தடத்தில் மாற்றம் - பொதுப்பணித் துறை விளக்கம்

ஷா ஆலம், செப். 19 - கிள்ளான்,  ஜாலான் மேருவில் மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டதற்கு இலகு ரயில் 3  (எல்ஆர்டி3) போக்குவரத்து திட்டப் பாதை அல்லது ரைட் ஆஃப் வே பகுதியில் ஆலயம் மற்றும் சீனக்கோயில்   கட்டமைப்புகள் இருப்பதே காரணமாகும்.

கூட்டரசு  சாலையான இது  கட்டுமானம் மற்றும் மேம்பட்டுப் பணிகளுக்காக  கடந்த  2018ஆம் ஆண்டு எல்ஆர்டி3  தரப்பிடம்  ஒப்படைக்கப்பட்டதாக கிள்ளான் பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) முகநூலில் வெளியிட்ட
ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

திட்டமிடல் கட்டத்தில், சீனக்கோவில் (முன்புறம்) மற்றும்  ஆலயம் (பின்புறம்) ஆகிய கட்டமைப்புகளை இடிக்க வேண்டிய வகையில் சாலைக்கான புதிய வடிவமைப்பு இருந்தது.

இருப்பினும்,  ஆலயத்தின் ஒரு பகுதியை மட்டுமே எல்ஆர்டி3 வழியாக பிரசரானா மலேசாயா பெர்ஹாட் நிறுவனத்தால் எடுக்க முடிந்தது என்று அது கூறியது.

இந்தப் பிரச்சினை மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (மிரோஸ்),  கிள்ளான் அரச மாநகர் மன்றம் ஆகியவற்றின் கவனத்தையும் பெற்றது, அவர்கள் கடந்த  மே 13 ஆம் தேதி கிள்ளான் பொதுப்பணித் துறையுடன் களத்தில் இறங்கி இந்த மாற்றத்தின் காரணமாக
சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்தனர்.

பொதுப்பணித் துறை தலைமையகத்தின் சாலை வசதிகள் பராமரிப்பு கிளை  மேற்கொண்ட ஏற்பு தணிக்கை முழுமையாக செயல்படுத்தப்படாததால் சாலை இன்னும் தங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை  விளக்கியது.

முன்னதாக, தரம் உயர்த்தும் பணிக்கு பிறகு சாலை நேராக இல்லாதது குறித்து  சாலைப் பயனாளிகள்  கவலை சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்திருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.