திருவனந்தபுரம், செப் 18 - கேரளாவில், மூளையை தின்னும் அமீபாவால் ஏற்படும் மிக அபாயகரமான PAM எனப்படும் மூளைத் தொற்று பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இவ்வாண்டு மட்டும் 69 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அமீபா சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் நீந்தும் போது அல்லது குளிக்கும் போது மூக்கின் வழியே உடலில் நுழைகிறது.
ஆனால், மனிதர்களிடையே பரவாது. தொற்று ஏற்பட்டால் தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
சில நாட்களிலேயே மூளை வீக்கம் ஏற்பட்டு மரணத்தில் போய் முடிகிறது.
உலகளவில் உயிர் பிழைத்தவர்கள், தொற்று மூளைக்கு செல்லும் முன் சிகிச்சை பெற்றவர்களே ஆவர். எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சை பலனளிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் குளம், ஏரி போன்ற சுத்தமில்லாத நீரில் நீந்துவதை தவிர்க்கவும், நீந்தும் போது மூக்குக் கிளிப் பயன்படுத்தவும், கிணறு மற்றும் தொட்டிகளில் உள்ள தண்ணீரில் குளோரின் பயன்பாட்டை உறுதிச் செய்யவும் கேரள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.