ad

தேவைக்கு முன்னுரிமை  அளித்து நிதிச் சுமையை தவிர்ப்பீர் - மந்திரி புசார் வலியுறுத்து

18 செப்டெம்பர் 2025, 9:43 AM
தேவைக்கு முன்னுரிமை  அளித்து நிதிச் சுமையை தவிர்ப்பீர் - மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், செப். 18 - அதிக செலவுகள் மற்றும் நிதி சிக்கல்களால் சுமை ஏற்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியத் தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினை  கண்டறிவதில்  மக்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

இந்த அம்சம் ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும்   நாடு  சுதந்திர சந்தையை கடைப்பிடிப்பதால் இது கவனத்திற்குரியது என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனவே, ஒவ்வொரு குடிமகனும் நிதிச் சட்டங்கள் மற்றும்  எவ்வாறு செலவு செய்வது என்பது பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பான செலவு மற்றும் பண மேலாண்மையை உறுதி செய்வதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று  தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சந்தைக்கு சுதந்திரமான இடத்தை வழங்கக்கூடிய  ஒரு நாட்டில் நாம் இருக்கிறோம். அதிக செலவு, பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகமாக வாங்குவது அந்த பகுதியில் பொருளாதாரத்தை மேலும் அதிகப்படுத்தும்.  உண்மையில் சுய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க நமக்கு ஒரு வழியை இது கொடுக்கிறது என்றார் அவர்.

எங்கள் அரசாங்கம் கம்யூனிச அல்லது சோசலிச போக்குகளைப் போல சந்தையை நிர்ணயிப்பதில்லை. இது பயனீட்டாளர்களுக்கு  நிறைய இடத்தையும், பொருட்களை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

மக்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் சுதந்திரமாகச் செலவிடவும் நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

மாநில திவால் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கான நிதி அறிவாற்றல்  திட்டத்தை  தொடக்கிவைத்தபோது அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட்டும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.