ஷா ஆலம், செப் 18: கோலாலம்பூரிலிருந்து டாக்காவுக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் MH102, விமானி அவசரநிலையை அறிவித்ததை அடுத்து பாங்காக்கிற்குத் திருப்பி விடப்பட்டது.
போயிங் 737-800 விமானம் காலை 9.30 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து பங்களாதேஷின் டாக்காவுக்குப் புறப்பட்டதாக ``Airlive.net`` தெரிவித்துள்ளது.
9M-MLN என்ற பதிவு எண்ணைக் கொண்ட அவ்விமானம் மியான்மர் வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
பின், விமானம் உடனடியாக தாய்லாந்தை நோக்கி வலதுபுறம் திரும்பி, புறப்பட்ட இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களுக்குப் பிறகு பாங்காக்கில் தரையிறங்கியது.