கோலாலம்பூர், செப் 17 - சபா மற்றும் சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மொத்தம் 53 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சபாவில் 24 ஆரம்ப பள்ளிகளும் 5 இடைநிலைப் பள்ளிகளும் பாதிப்படைந்துள்ள வேளையில், சரவாக்கில் 22 ஆரம்ப பள்ளிகளும் இரண்டு இடைநிலைப் பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த பள்ளிகள் இருக்கின்ற வளாகத்தில் ஆறு தற்காலிக நிவாரண மையங்கள் தற்போது செயல்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் ஐந்து சபாவிலும், ஒன்று சரவாக்கிலும் உள்ளன. அவ்விரு மாநிலங்களின் கல்வித் துறை மூலம் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கல்வி பணியாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் வெள்ள நிலைமைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா