கோத்தா கினாபாலு, செப். 17 - தங்கும் விடுதியில் தமக்கு பிரச்சனை இருந்தது குறித்து ஸாரா கைரினா மகாதீரிடமிருந்து தனக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று பாப்பாரில் உள்ள துன் டத்து முஸ்தபா தேசிய சமயப் பள்ளியின் தங்கும் விடுதி தலைமை வார்டன் மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த முதலாம் படிவ மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையின் எட்டாவது நாளான இன்று மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி அமீர் ஷா அமீர் ஹாசன் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் ஸாரா கைரினாவுக்கு அரபு மொழியையும் கற்றுக் கொடுத்தவரான 31 வயதான அஷாரி அப்துல் சகாப்
இவ்வாறு கூறினார்.
படிவம் 1 பாத்திமா வகுப்பில் பயின்று வந்த ஸாரா கைரினா, ரபியத்துல் அதவியா புளோக்கின் 3வது மாடியில் உள்ள குராத்து அயூன் தங்கும் விடுதியில் இதர 11 மாணவிகளுடன் தங்கியிருந்தாகவும் அந்தக் கட்டிடம் தனது மேற்பார்வையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நான் அரபு ஆசிரியராகவும், விடுதியின் தலைமை வார்டனாகவும் இருந்த சமயத்தில் விடுதியில் தாம் எதிர்கொண்ட எந்தவொரு பிரச்சனைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாணவியிடமிருந்து எனக்கு எந்தப் புகாரும் வரவில்லைஎன்று சாட்சி வாக்குமூலத்தைப் படிக்கும்போது அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி நடந்த சம்பவத்தை நினைவுக் கூர்ந்த அஸாரி, பாதுகாவலரான 65 வயது லினா மன்சோடிங் என்பவரிடமிருந்து அதிகாலை 3.04 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் அந்த பதின்ம வயது மாணவிக்கு நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
விடுதியில் பிரச்சனை இருந்ததாக ஸாரா கைரினா புகார் அளிக்கவில்லை - வார்டன் சாட்சியம்
17 செப்டெம்பர் 2025, 8:40 AM