கோலாலம்பூர், செப் 17: பகாங், குவாந்தானில் வசிக்கும் மார்பகப் புற்றுநோயாளி நோரனிதா அப்துல் ராஃபுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி மூலம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அஹ்மட் ஃபர்ஹான் அம்மாதுவின் இல்லத்தில் இந்த நன்கொடையை வழங்கினார்," என்று பிரதமர் முகநூல் பதிவின் மூலம் தெரிவித்தார்.
நோரனிதா தொடர்ந்து வலிமையாக இருக்க வேண்டும். அவர் விரைவில் குணமடைய வேண்டும். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை எளிதாக அமைய வேண்டும் என்றும் தான் பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் தெரிவித்தார்.
- பெர்னாமா