ஷா ஆலம், செப். 17 - சுற்று வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் குடியிருப்பாளர்களை தற்காலிக நிவாரண மையங்களுக்கு கொண்டுச் செல்வதில் உதவ டுசுன் துவா தொகுதி சேவை மையம் தயாராகி வருகிறது.
இன்று காலை 9.00 மணி நிலவரப்படி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் காரணமாக உலு லங்காட், பத்து 12 பகுதியில் உள்ள முழு கிராமமும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்கள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் ஏற்பட்டது போல் திடீர் வெள்ளப்பெருக்குக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும் நீர் மட்டம் இன்னும் உயரவில்லை என அவர் சொன்னார்.
மழை குறையத் தொடங்கிவிட்டது. ஆனால் துசுன் துவா தொகுதி சேவை மையம் கிராமத் தலைவருடன் இணைந்து தயார் நிலையில் உள்ளது. மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் நிவாரண மையங்களை மீண்டும் திறக்கவும் உணவு மற்றும் பானங்கள் போன்ற அடிப்படை உதவிகளை வழங்கவும் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர் என்று சிலாங்கூர் மீடியாவிடம் அவர் தெரிவித்தார்.
இன்று காலை 9.10 மணி நிலவரப்படி உலு லங்காட், பத்து 12 பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் 42.41 மீட்டராக உயர்ந்து அபாய அளவை எட்டியுள்ளதாக சிலாங்கூர் மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆற்றில் நீர்மட்டம் அதிகரிப்பால் வெள்ள அபாயம் - தயார் நிலையில் டுசுன் துவா தொகுதி
17 செப்டெம்பர் 2025, 2:48 AM