ஷா ஆலம், செப். 16- எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, நியாயமான மற்றும் வளமான மலேசியாவை உருவாக்குவதற்கு வேற்றுமைகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு மக்களை மந்திரி புசார் கேட்டுக் கொண்டார்.
முந்தைய தலைவர்களின் துணிச்சல் மலேசியாவை சுதந்திரமான, வளமான மற்றும் நம்பிக்கையான தாயகமாக மாற்றியுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்று நாம் மலேசிய தினத்தை நாம் கொண்டாடுகிறோம். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சபா, சரவாக் மற்றும் மலாயா ஆகியவை ஒன்றிணைந்து மலேசியா என்ற இறையாண்மை கொண்ட தேசத்தை உருவாக்கிய வரலாற்றுப்பூர்வ தருணம் இதுவாகும்.
நமது பயணம் எளிதானது அல்ல. ஆனால் முந்தைய தலைவர்களின் தைரியம், மக்களின் ஒற்றுமை உணர்வு மற்றும் சுய காலில் நிற்கும் எங்களின் உறுதிப்பாடு ஆகியவை மலேசியாவை சுதந்திரமான, வளமான மற்றும் நம்பிக்கையான தாயகமாக மாற்றியுள்ளன என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்
ஒன்றிணைந்து வலுவான மலேசியாவை உருவாக்குவோம்- மந்திரி புசார் அமிருடின்
16 செப்டெம்பர் 2025, 11:35 AM



