கோலாலம்பூர், செப் 16 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் மலேசியா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மலேசியா நீடித்த அமைதியைப் பெறவும் பேரிடரிலிருந்தும் பாதுகாக்கப்படவும் தாங்கள் பிரார்த்திப்பதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் அவர்கள் கூறினர்.
தொடக்க காலத்திலிருந்தே நாட்டின் பலமாக இருந்து வரும்
பல இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் கருத்திணக்கத்திற்கு சுல்தான் இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.
"மலேசியா மடாணி: மக்கள் எண்ணம் கொண்டவர்கள்" என்ற கருப்பொருளில் மலேசியா தின கொண்டாட்டம் இன்று காலை 9.00 மணிக்கு பினாங்கு, பட்டர்வொர்த்தில் உள்ள பி.ஐ.சி.சி.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.