கோலாலம்பூர், செப். 16- நாட்டின் 92வது ஆயுதப் படை (ஏ.டி.எம்.) தினத்தை முன்னிட்டு அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அன்புக்குரிய தாய்நாட்டிற்காக தங்கள் கடமையை நிறைவேற்றுவற்கு எப்போதும் ஆரோக்கியம், வலிமை மற்றும் உயர் போராட்ட மனப்பான்மையுடனிருக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று
மலேசிய ஆயுதப்படைகளின் உச்ச தளபதி என்ற முறையில்
பிரார்த்திக்கிறேன் என பேரரசர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படைக்கு சேவையாற்றிய மற்றும் தங்கள் பங்களிப்பை வழங்கிய ஓய்வுபெற்ற வீரர்களுக்கும் பேரரசர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நம்மை நிரந்தரமாக விட்டுச் சென்றவர்களுக்கு அல்-ஃபாத்திஹா. அவர்கள் விசுவாசிகள் மற்றும் தியாகிகள் மத்தியில் இடம் பெறட்டும் என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
நாட்டின் 92வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து
16 செப்டெம்பர் 2025, 5:01 AM