ஈப்போ, செப். 16- இங்கிருந்து சுமார் 121 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரிக் அருகே உள்ள செலாட் பாகார் ஆயர் காலா நதிக்கரையில் பாலினம் கண்டறியப்படாத ஒரு குழந்தையின் உடல் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டது.
அக்குழந்தையின் உடல் கணடுபிடிக்கப்பட்டது தொடர்பில் பிற்பகல் 2.15 மணியளவில் தமது தரப்புக்கு பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக கிரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் சமாட் ஓத்மான் கூறினார்.
சம்பந்தப்பட்ட குழந்தையின் பாலினம் மற்றும் இனம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
அக்குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 318 வது பிரிவின் விசாரிக்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களை காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. மேலும் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது என்று அவர் கூறினார்.