ஜோர்ஜ்டவுன், செப் 15 - 2023ஆம் ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் அறிமுகமாகி மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் Tabung Kasih @HAWANA நிதியுதவி திட்டம் வழி நாடு முழுவதும் உள்ள 500 ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
அதில் 500ஆவது நபராக, `Kwong Wah Yit Poh` தினசரி நாழிதளின் செய்தியாளரான 44 வயதுடைய சோ கார் சூன்க்கு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் நிதி உதவி வழங்கினார்.
பினாங்கில் 22வது நபராக இந்த உதவியைப் பெறும் சோ, 2018ஆம் ஆண்டு தொடங்கி சீன மொழி நாழிதளில் பணியாற்றி வருவதாக HAWANA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட காது கேளா பிரச்சனையால், அவரது தொடர்பு திறன் பாதித்தது.