கோலாலம்பூர், செப். 15 - கடந்த வாரம் வியாழக்கிழமை கம்போங் சுங்கை பாருவில் 37 வரிசை தரை வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட களேபரத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் 186, 353 மற்றும் 324வது பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட நபர் காவலில் வைத்துள்ளார் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
ஆம், கம்போங் சுங்கை பாரு சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு நபர் நேற்று கைது செய்யப்பட்டதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 15 முதல் 50 வயதுக்குட்பட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவர்கள் அல்ல என்பது மேலும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்கள் ஒரு அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களுக்கு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு உள்நோக்கம் அல்லது நலன்கள் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவத்தில் சுலிஸ்மி அஃபெண்டியின் தலையிலும் காயம் ஏற்பட்டது.
கம்போங் சுங்கை பாருவில் களேபரம் - அரசியல் கட்சித் தலைவர் கைது
15 செப்டெம்பர் 2025, 9:31 AM