கலிஃபோர்னியா, செப் 15 - கலிஃபோர்னியாவில் அதிகாரப்பூர்வமாக பொது விடுமுறை நாளாக தீபாவளி அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா சட்டமன்றம் "AB 268" மசோதாவை நிறைவேற்றி, தீபாவளியை மாநிலப் பொது விடுமுறை நாட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ், மாநில அரசாங்க ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவர். மேலும், சமூகக் கல்லூரிகள் மற்றும் பொது பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.
கடந்த ஜனவரியில் முன்மொழியப்பட்ட இந்த மசோதா தற்போது சட்ட சபை செனட் சபை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டு, மாநில ஆளுநரின் கையொப்பத்துக்காகக் காத்திருக்கிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தீபாவளியின் பண்டிகையின் பண்பாட்டு முக்கியத்துவத்தை அமெரிக்காவின் பல மாநிலங்களைப் போல கலிஃபோர்னியாவும் இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இவ்வாண்டு தீபத் திருநாள் எதிர்வரும் அக்டோபர் 20, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.