ஷா ஆலம், செப். 15 - கோலாலம்பூர், பெர்சியாரான் ஹாங் துவா ஆஃப் ஜாலான் இம்பியில் நேற்றிரவு நிகழ்ந்த நான்கு கார்கள் மற்றும் இரண்டு சுற்றுலா பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்திற்கு இரவு 10.49 மணிக்கு அவசர அவசர அழைப்பு வந்தது.
ஜாலான் ஹாங் துவா மற்றும் புடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் தீயணைப்பு மீட்பு டெண்டர் இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செயல்பாட்டுத் தளபதி சே முகமது சோலேஹூடின் சே ஜூசோ கூறினார்.
இரவு 10.57 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புக் குழுவினர் டோயோட்டா வியோஸ், நிசான் அல்மேரா, ஹூண்டாய் ஸ்டாரியா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய நான்கு வாகனங்களும், இரண்டு சுற்றுலா பேருந்துகளும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளதை கண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இரண்டு ஆடவர்கள், இரண்டு சிறார்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக மீடகப்பட்டு சிகிச்சைக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.
நான்கு கார்கள், இரு சுற்றுலா பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐவர் காயம்
15 செப்டெம்பர் 2025, 4:58 AM