ad

இரண்டு நாட்களுக்கு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

15 செப்டெம்பர் 2025, 2:36 AM
இரண்டு நாட்களுக்கு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

ஷா ஆலம், செப் 15: மலேசியா தினப் பொது விடுமுறையை முன்னிட்டு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று பிகேபிஎஸ் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 17 முதல் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் மாநிலம் முழுவதும் வழக்கம் போல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு தேவையான ஆறு முக்கியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இத்திட்டத்தில் இவ்வாண்டு முதல் அதன் எண்ணிக்கை 12ஆக அதிகரிக்கப்படுள்ளதாக வேளாண் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

பட்ஜெட் 2025-இல் இத்திட்டத்தை செயல்படுத்த RM30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைச் செலவுகளின் சுமையை குறைக்க உதவும் மாநில நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

பட்ஜெட் 2025யை தாக்கல் செய்யும் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 10 எஹ்சான் மார்ட் பல்பொருள் அங்காடி கடைகளை திறக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.