ஷா ஆலம், செப்டம்பர் 13 - மலேசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை வளர்ந்து வரும் பூமிபுத்ரா மக்கள்தொகையின் செல்வாக்கைப் பொறுத்தது, விரிவடைந்து வரும் மக்கள்தொகையின் எண்ணிக்கைப்படி அது எதிர்கால தேர்தல் முடிவுகளை வடிவமைக்க கூடும்அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சமீபத்திய புள்ளியியல் துறையின் (DOSM) மக்கள் தொகை கணிப்பு 2020-2060 க்கான அறிக்கையை மேற்கோள் காட்டி வரவிருக்கும் தசாப்தங்களில் பூமிபுத்ரா மக்கள் தொகை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தேர்தல்களில் பெரும்பான்மை இனக்குழு குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது, 2022 பொதுத் தேர்தலில் (GE15) ல் கண்டது போல், பெரிக்காத்தான் நேஷனல் (PN) 54 சதவீத மலாய் வாக்காளர்கள் ஆதரவைப் பெற முடிந்தது, பாரிசன் நேஷனல் (BN) 32 சதவீதம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் 13 சதவீத்த்தை பெற்றன.
எதிர்க்கட்சி கூட்டணி தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், மலாய் பெரும்பான்மை இடங்களில் அதன் வலுவான செயல்திறன் வழி, நாட்டின் முதல் தொங்கு நாடாளுமன்றம் அமைய போதுமானதாக இருந்தது.பெரிகாத்தானுக்கு வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் இருந்து கிடைத்த வலுவான மலாய் ஆதரவை தொடர்ந்து அவை இப்போது கெடா (67 சதவீதம்) கிளந்தான் (66 சதவீதம்) மற்றும் திரங்கானு (63 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன, இதன் விளைவாக கிராமப்புற மற்றும் புற நகர் பகுதிகளில் அவை அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன இலம் மூலோபாயத்தை உருவாக்க முகாமை ஊக்குவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமிபுத்ரா மக்கள் தொகை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப் படுவதால், வலுவான மலாய்க்காரர்கள் ஆதரவைக் கொண்ட கட்சி எதிர்காலத்தில் புத்ரஜெயா வின் திறவுகோல் கொண்டிருக்க முடியும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.நுசந்தரா அகாடமி ஃபார் ஸ்ட்ராடஜிக் ரிசர்ச்சின் மூத்த சக ஆஸ்மி ஹசன் கூறுகையில், டிஓஎஸ்எம் மக்கள் தொகை கணிப்பு அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை குறிக்கிறது என்றார்."சீனர்கள் அல்லது இந்தியர்கள் அல்லது, பூமிபுத்ரா வாக்காளர்களோ வரவிருக்கும் தசாப்தங்களில் கிங்மேக்கர்களாக இருப்பார்களா?.

"இருப்பினும், பூமிபுத்ரா என்பது மலாய்க்காரர்களை மட்டும் உள்ளடக்கியது அன்று, அது பரந்த இனத்தின் அடையாளம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் தாக்கங்களை மதிப்பிடும்போது அந்த வேறுபாடுகளும் கருத்தில் கொள்ள முக்கியமானது "என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.DOSM இன் கூற்றுப்படி, பூமிபுத்ரா மக்கள் தொகை 2020 ஆம் ஆண்டில் 69.4 சதவீதத்திலிருந்து 2060 ஆம் ஆண்டில் 79.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சீனர் மலேசியர்களின் பங்கு 23.2 சதவீதத்திலிருந்து 14.8 சதவீதமாகவும், இந்தியர்கள் 6.7 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயதான வாக்காளர் அதிகரிப்பு தாக்கம்இந்த இன-மக்கள் தொகை மாற்றம், மலேசியாவின் வயதான மக்களுடன் சேர்ந்து, தேர்தல் முடிவுகளை மட்டுமல்ல, அரசியல் உருமாற்றத்தை பாதிக்கும் என்று ஆஸ்மி நம்புகிறார்."மூன்று தசாப்தங்களாக, சராசரி சுமார் 41 வயதாக இருக்கும். வாக்காளர்கள் மிகவும் பகுத்தறிவார்ந்த, கணிக்கக்கூடிய முடிவுகளை எடுக்க முனைகிறார்கள், அதே நேரத்தில் இளைய வாக்காளர்கள் மிகவும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல் படுவதால் அவர்களின் நிலையை கணிப்பது கடினம்.
"எனவே, இரண்டு நிலையான மக்கள் தொகுதிகள் தோன்றுவதை நாம் காணலாம், வயதான பூமிபுத்ரா வாக்காளர்கள் கிங் மேக்கர்களாகவும், நிலையானவர்களாகவும் உள்ளனர்".
மலேசியாவின் வயதான வாக்காளர்கள் போக்கு ஏற்கனவே வடிவம் பெற்று வருகிறது-2060 ஆம் ஆண்டில் மலேசியர்களில் 18.3 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற் பட்டு இருப்பார்கள், என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது 2020 ஆம் ஆண்டின் 6.8 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று DOSM கணித்துள்ளது.

2048 ஆம் ஆண்டில் நாடு ஒரு வயதான சமூகமாகவும், 2060 ஆம் ஆண்டில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு போன்ற முக்கிய நகர்ப்புற மாநிலங்களில் "அதிக வயதுடைய" சமூகமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பூஜ்ஜியம் முதல் 14 வயதுடைய இளைஞர்கள் விகிதம் 2060 ஆம் ஆண்டில் வெறும் 16 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வேலை செய்யும் வயதுக் குழுவும் (15 முதல் 64 வரை) 2030 ஆம் ஆண்டில் 70.8 சதவீதத்திலிருந்து 65.7 சதவீதமாகக் குறையும்.வரலாற்று ரீதியாக நகர்ப்புற நடுத்தர வர்க்க வாக்காளர் அடித்தளத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும் சீனர் மற்றும் இந்திய சமூகங்கள், மக்கள்தொகையில் ஒரு பங்காக மேலும் குறைந்து, காலப்போக்கில் அவர்களின் தேர்தல் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிரச்சார அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுங்கள்
மலேசியாவின் பசிபிக் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆலோசகர் ஓ ஈ சன் கூறுகையில், DOSM இன் கணிப்புகள் மலாய்க்கார்ர் அல்லாத கட்சிகளின் அன்றாட பிரச்சினைகள், குறிப்பாக நகர்ப்புற இடங்களில், இன ரீதி பிரச்சாரங்களில் இருந்து விடுபட்டு அப்போதைய பொது விவகாரங்களை பிரச்சார யுக்தி ஆக்க வேண்டும்..

"மலாக்கார்ர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இன எல்லைகளைத் தாண்டி தேர்தல் பிரச்சாரங்களை அதிக அளவில் செய்ய வேண்டியிருக்கும். பல இன மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வாழ்வாதாரம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பொதுவான பிரச்சினைகள் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் "என்று அவர் கூறினார்.
டிஏபி ஏற்கனவே அதன் வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் அதிக மலாய் தலைவர்களை ஒருங்கிணைக்க தொடங்கியுள்ளது என்று ஓ குறிப்பிட்டார்.
இருப்பினும், மலாய்க்கார்ர் அல்லாத வாக்காளர்கள் இன்னும் நிலைத்தன்மையை மாற்றும் சிறுபான்மையினராக" செயல்பட முடியும் , குறிப்பாக மலாய் அரசியல் களம் பிரிந்து இருப்பதால் சிறுபான்மையினரின் தாக்கம் தொடரக்கூடும் என்பதை ஒப்புக் கொண்டார்.
"நகரமயமாக்கப்பட்ட தொகுதிகளில், இனம் சார்ந்த யுக்திகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினம், மக்களை ஆட்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளான போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வருமானம் போன்ற பொதுவான சவால்கள் அனைவரையும் பாதிக்கின்றன" என்று ஓ கூறினார்.
அவரது கருத்து 15 வது பொதுத் தேர்தலின் முடிவுடன் ஒத்துப்போகிறது, பன்முகத்தன்மையை ஆதரிக்கும் ஒரு கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் -சிலாங்கூர், பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் உள்ள நகர்ப்புற மற்றும் கலப்பு தொகுதிகளில் பெரும்பான்மையை வென்றது, அங்கு இனப் பிரச்சினைகள் குறைவாகவே உள்ளன

கடந்த 15 பொதுத் தேர்தலில் எந்த ஒரு அணியும் அருதி பெரும்பான்மை பெறத் தவறியது ஹரப்பான், பிஎன், கபூங்கான் பார்டி சரவாக் மற்றும் கபூங்கான் ராக்யாட் சபா இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஒற்றுமை அரசாங்கத்தைக் கண்டது, அது அரசியல் கட்சிகள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்காவிட்டால், கூட்டு அரசாங்கம் புதிய இயல்பாக மாறக்கூடும் என்று ஆஸ்மி கூறினார்.