ad

அபாயகரமான முறையில் காரை செலுத்திய புகாரில்  அரசு ஊழியர்  கைது

14 செப்டெம்பர் 2025, 7:36 AM
அபாயகரமான முறையில் காரை செலுத்திய புகாரில்  அரசு ஊழியர்  கைது

கோலாலம்பூர், செப். 14 -   பாங்கி டோல் சாவடியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதோடு  பெண் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இருபத்தைந்து  வயதுடைய அந்த நபர் இரவு 9.50 மணியளவில் காஜாங் காவல் தலைமையகத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக  காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர்  தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.

சந்தேக நபரின் பெரோடுவா மைவி காரும் டாங் வாங்கி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின்  279வது பிரிவு  மற்றும் 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளின்  6(1) வது பிரிவின்  கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும்  31 வயது பெண் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7.50 மணியளவில்
புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட பெண் அதிகாலை 6.10 மணியளவில்  வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ​​பாங்கி  டோல் சாவடியில் பெரோடுவா மைவி கார் அவரது காரின் இடது முன்பக்கம் மோதியது   தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக நாஸ்ரோன் மேலும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சாலையின் ஓரத்தில் வாகனத்தை  நிறுத்தினர். அப்போது  இருவருக்கும் இடையே  வாகாகுவாதம்  ஏற்பட்டது.  சமிக்ஞை செய்யாமல் தடத்தை  மாற்றியதாகக் கூறி சந்தேக நபர் புகார்தாரரை திட்டினார் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.