ஷா அலாம், செப் 13 — பள்ளி விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க, உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் “Cuti Sekolah @MSAS” நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்நிகழ்ச்சி சுல்தான் ஆலம்ஷா அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 15 முதல் 21 வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
வினாடி வினா,என்னை தெடு , படத்தொகுப்பு புதிர், குறுக்கெழுத்துப் போட்டி, வர்ணம் தீட்டுதல் சிலாங்கூர் பாரம்பரியக் கலைக் காட்சி மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஓவியம் வரைவது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. மேலும், பொதுமக்கள் பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பைப் பெறுவதோடு, கமேலான் இசையையும் கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
சிலாங்கூர் சுற்றுலா படி, இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் விடுமுறை நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தினரை மாநில பாரம்பரியச் செல்வங்களுடனும் உள்ளூர் கலாச்சாரத்துடனும் நெருக்கமாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
