கோலாலம்பூர், செப். 13 – மலேசிய சுங்கத் துறையின் MyCIEDS நாடு முழுவதும் 2026 ஜனவரி முதல் முழுமையாக செயல்படவுள்ளது என சுங்கத் துறைத் தலைவர்அனீஸ் ரிசானா முகத் ஜைனுடின் தெரிவித்தார்.
MyCIEDS சுங்கத் தகவல் முறைமையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களே செயலாக்கப்படும் வண்ணம் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார். இதில் தணிக்கை தடமுறை அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பயனர் நடவடிக்கையும் பதிவு செய்யப்படும். இது விரையம் மற்றும் தகவல் முறைகேடு ஏற்படுவதைத் தடுக்கிறது என்றார்.
கடந்த செப்டம்பர் 10 வரை, நாடு முழுவதும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள மொத்தம் 7,228 அனுப்புநர் முகவர்கள் மற்றும் 1,721 நிறுவனங்கள் இந்த முறைமையின் பயனர்களாக பதிவு செய்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.