ஷா ஆலம், செப் 13- சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில பொது நூலகக் கழகம் இணைந்து சின்னம்மை தடுப்பூசி திட்டத்தை இலவசமாக நடத்துகிறது.
இந்த திட்டம் செப்டம்பர் 13, 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை புஸ்தகா ராஜா துண் உடா நூலகத்தின் லாபியில் நடைபெறும்.
சின்னம்மை மற்றும் ஜெர்மன் சின்னம்மை தடுப்பூசி, 2020 ஆகஸ்ட் 1 முதல் 2025 ஜனவரி 31 வரை பிறந்த மலேசிய மற்றும் அந்நிய குடியுரிமை கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில பொது நூலகக் கழகம் தெரிவித்தது.
பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், குழந்தையின் அடையாள ஆவணம் மற்றும் சுகாதாரப் புத்தகத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறுவர்களை சின்னம்மையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.